உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

ஆட்டையாம்பட்டி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி ஸ்ரீ எட்டுப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, சத்தாபரண நிகழ்ச்சி, வியாபாரிகள் சங்கம் சார்பில், வாண வேடிக்கையுடன், குறவன் குறத்தி ஆட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று மாலை, தீமிதி விழாவும், அக்னி கரகம் எடுத்து வருதலும், அம்மன் திருத்தேர் ஊர்வலமும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று, அதிகாலை முதல் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை, 5 மணிக்கு, கம்பம் வழி அனுப்பும் விழாவும் நடக்கிறது. நாளை, 15ம் தேதி, வண்டி வேடிக்கை, அலகு குத்துதல், பூந்தேர், உடற்கூறு நிகழ்ச்சியும், 16ம் தேதி, மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !