உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 27 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

27 அடி உயர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

திருப்போரூர் : பெருந்தண்டலம் மலையில், 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. திருப்போரூர் அடுத்துள்ளது, பெருந்தண்டலம் கிராமம். மலைகளால் சூழ்ந்துள்ள இக்கிராமத்தில், பக்தர்கள் பங்களிப்புடன், ஒரு கோடி ரூபாய் செலவில், 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலை அமைக்கப்பட்டது. இதன் கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.முன்னதாக, கடந்த புதன்கிழமை முதல், யாக சாலை பூஜைகள், வாஸ்து பூஜை, கோ பூஜை ஆகியவை நடந்தன. நேற்று காலை 10:00 மணியளவில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !