பவானி கோவிலுக்கு சங்குகள் காணிக்கை!
பவானி: பவானி கோவிலுக்கு அபூர்வமானதாக கருதப்படும் வலம்புரி மற்றும் கோமாதா சங்குகள், சிவ தொண்டர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டது. பவானி, கூடுதுறையில் வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. மிகப்பழமையான, இக்கோவிலில், கடந்த, ஜூலை ஏழாம் தேதி, கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, பக்தர்கள், தனி நபர்கள் சார்பில், சுவாமி அம்பாளுக்கு தங்க கவசம், வெள்ளி பொருட்கள் போன்றவை காணிக்கையாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, அந்தியூரை சேர்ந்தவர் வெங்கட்ராமன். இவரது நண்பர் காசி சிவா. இவர்கள் இருவரும், சிவ தொண்டர்கள். சிவன் கோவிலில், மூலவருக்கு பூஜை செய்யும் போது, மங்கள வாத்தியங்களுடன் சங்கு நாதத்தையும் ஒலிக்க செய்ய விரும்பினர். இதனால், கடலில் பல்வேறு வகையான சங்குகள் கிடைத்தாலும், அபூர்வமான வலம்புரி மற்றும் கோமாதா சங்கு அறியப்படுகிறது. இவ்விரு சங்குகளிலும், இரு விதமான ஓசை எழுப்பப்படும். இவற்றை மொத்தமாக வாங்கி, தமிழகத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களுக்கு கொடுக்க முடிவு செய்தனர். இதன்படி, காசி, பழனி, சிவன்மலை, சென்னிமலை, கொடுமுடி உட்பட, 40க்கும் மேற்பட்ட சிவன் கோவில்களுக்கு, சங்குகளை வழங்கி உள்ளனர். தற்போது, கன்னியாகுமரியில் இருந்து, இந்த இரண்டு அரிய சங்குகளை வாங்கி, இரண்டு சங்குகளையும் வாங்கி, பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள சங்கமேஸ்வரருக்கு வழங்கினர். கடந்த, இரண்டு ஆண்டாக, இதுபோன்ற சங்குகளை, சிவன் கோவிலுக்கு வழங்கி வருவது, சிவனுக்கு செய்யும் தொண்டாக கருதுவாக, அவர்கள் தெரிவித்தனர்.