உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி சகாயமாதா ஆலய விழா

காரைக்குடி சகாயமாதா ஆலய விழா

காரைக்குடி : காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா, ஆலய விழாவை முன்னிட்டு கடந்த 8-ம் தேதி கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில், தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, 6 மணிக்கு திருப்பலியும் நடந்தது. திருவிழா திருப்பலி நேற்று முன்தினம் பாதிரியார்கள் வின்சென்ட் அமல்ராஜ், அந்தோணிசாமி, அருள்ஜோசப், அமீர் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட முதன்மை குரு செல்வராஜ் மறையுரை ஆற்றினார். சப்பர பவனி நேற்று காலை நடந்தது. தொடர்ந்து நற்கருணை திருப்பலி, திருமுழுக்கு அளித்தலும், கொடியிறக்கமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !