மாரனோடை ஆலய ஆண்டு பெருவிழா!
ADDED :4122 days ago
உளுந்துõர்பேட்டை: மாரனோடை துõய விண்ணரசி அன்னை ஆலய தேர் பவனி விழா நடந்தது. உளுந்துõர்பேட்டை தாலுகா மாரனோடை துõய விண்ணரசி அன்னை திருத்தலத்தின் ஆண்டு பெருவிழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. சென்னை சலேசிய மாநில தலைவர் இரபேல்ஜெயபாலன் கொடியேற்றி வைத்து, திருப்பலி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு திருப்பலி நடந்தது. கடந்த 15ம் ÷ ததி காலை 8 மணிக்கு கெடிலம் தொன்போஸ்கோ மாணவர் இல்ல பிரான்சிஸ் போஸ்கோ, பொருளாளர் ஜோசப் டிசோசா கமலேஷ் ஆகியோர் தலைமையில் திருப்பலி, ஆடம்பர திருவிழா கூட்டு பாடற் திருப்பலி நடந்தது. பின்னர் இரவு 10 மணிக்கு அன்னையின் ஆம்பர தேர் பவனி வீதியுலா நடந்தது. மறுநாள் திருப்பலி கொடியிறக்கம் நடந்தது.