மாரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா!
ADDED :4071 days ago
கும்மிடிப்பூண்டி : ஆத்துப்பாக்கம் மாரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா, சிறப்பாக நடைபெற்றது.கும்மிடிப்பூண்டி அருகே, ஆத்துப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். இந்த ஆண்டு, ஜாத்திரை திருவிழா, கடந்த மாதம், 27ம் தேதி துவங்கி, நேற்று முடிவடைந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று நடைபெற்ற அம்மன் திருவீதி உலாவின் போது, ஆத்துப்பாக்கம் கிராமவாசிகள் வீதிகள் தோறும் அம்மனுக்கு படையலிட்டு, கிடா வெட்டி வழிபட்டனர்.