வேளாங்கன்னிக்கு பாத யாத்திரை!
ADDED :4071 days ago
மரக்காணம்: சென்னையில் இருந்து வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த பக்தர்கள் பாதை யாத்திரை சென்றனர். சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள மாதாகோவில் சார்பில் அருட்தந்தை ஜோஸ்ஆண்ட்ரு தலைமையில் கடந்த 16ம் தேதியில் பாத யாத்திரை துவக்கினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடந்த 4 நாட்களாக செங்கல்பட்டு, மதுராந்தகம், மரக்காணம் வழியாக பாதை யாத்திரையாக மாதா உருவம் பொரித்த தேரினை இழுத்து வந்தனர். மரக்கணத்தில் மக்கள் தேரினை வளம் வந்து தரிசித்தனர். இவர்கள் வரும் 26 ம்தேதி வேளாங்கன்னி சென்றடைகின்றனர் . 29ம் தேதி கோவில் கொடி ஏற்றத்தில் கலந்துகொள்கின்றனர்.