துரிஞ்சளம்மன் கோவில் தேர் திருவிழா!
ADDED :4071 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த கோட்டமருதூர் துரிஞ்சளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த கோட்டமருதூர் துரிஞ்சளம்மன் கோவில், பிரம்மோத்சவ விழா கடந்த 12ம் தேதி கொடி யேற்றத்துடன் துவங்கியது. தினசரி இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 6 மணிக்கு துரிஞ்சளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தேரில் ஏற்றப்பட்டு வீதியுலா துவங்கியது.பக்தர்களின் தேர் வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்து சென்றனர். மாலை 3 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் அலமேலு அய்யனார், துணைத் தலைவர் குப்பன், ஒன்றிய கவுன்சிலர் செல்வதுரை செய்திருந்தனர்.