உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகளை மாலைக்குள் கரைக்க உத்தரவு!

விநாயகர் சிலைகளை மாலைக்குள் கரைக்க உத்தரவு!

சதுர்த்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்தை, மாலை, 6:00 மணிக்குள் முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. வரும், 29ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இந்து அமைப்புகள் சார்பில், தமிழகத்தில், பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்தவுள்ளனர். வழிபாட்டிற்கு பின், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர் நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சிலை விஜர்சன ஊர்வல பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, மாவட்ட நிர்வாகங்களுக்கு, அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், கூறப்பட்டுள்ளதாவது: சிலைகளை கரைப்பதற்கு முன், பூ, துணிகளை, தனித்தனியாக எடுத்து, மக்கும், மக்காத குப்பை தொட்டிகளில் பிரித்து போடவேண்டும். சிலை கரைக்கும் இடங்களில், குப்பையை எரிக்கவோ, நீர்நிலைகளில் கொட்டவோ கூடாது. கடந்த ஆண்டு, ஊர்வல வழித்தடங்களில் மட்டுமே, அனுமதிக்க வேண்டும். சிலைகள் அதிக உயரம் இருக்க கூடாது. சிலைகள் வைக்கும் இடங்களில், ஷெட் மின்விளக்கு வசதி அவசியம் இருக்க வேண்டும். சிலை வைக்க, இட உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும். ஊர்வலத்தில், ஆயுதங்கள் எடுத்து செல்லக்கூடாது. மாலை, 6:00 மணிக்குள் சிலைகளை, நீர்நிலைகளில் கரைத்து விடவேண்டும். ஊர்வலத்தில் பட்டாசு, ஒலி பெருக்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !