பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் தேர்திருவிழா!
ADDED :4063 days ago
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. கடந்த 13ம் தேதி வினாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. அன்று முதல் காலை, மாலையில் ”வாமி வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி÷ ஷக ஆராதனையும், மதியம் 1:00 மணிக்கு செடல் திருவிழாவும் நடந்தது. தொடர்ந்து, 2:30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வீதியுலா நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று 23ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி இரவு புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 25ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.