ஆவணி முதல் வெள்ளி கோவில்களில் சிறப்பு வழிபாடு!
ADDED :4196 days ago
விருத்தாசலம்: ஆவணி முதல் வெள்ளியையொட்டி, கொளஞ்சியப்பர் சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விருத்தாசலம் மண வாளநல்லுõர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், நேற்று காலை சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள் ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் அருள்பாலித்தனர். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேப்போன்று, சந்தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன், ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன், தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.