உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எலவனாசூர்கோட்டையில் ஆவணி மாத பூச விழா

எலவனாசூர்கோட்டையில் ஆவணி மாத பூச விழா

உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டையில் சன்மார்க்க சங்கம் சார்பில் உலக உயிரினங்கள் நலன் வேண்டி ஆவணி மாத பூச விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் 8 மணி வரை சிறப்பு வழிபாடு, அகவல் பாராயணம் நடந்தது. அப்போது புதியதாக ஜோதி விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை அப்பர் மடாதிபதி ஞானதேசிகர், சன்மார்க்க சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !