கண்ணூர்பட்டி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ராசிபுரம்:கண்ணூர்பட்டி மாரியம்மன் கோவிலில், வரும், 31ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. நாமக்கல் தாலுகா, புதுச்சத்திரம் அடுத்த கண்ணூர்பட்டி மகா கணபதி மற்றும் மாரியம்மன் கோவிலில், வரும், 31ம் தேதி, காலை, 6 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக, 28ம் தேதி, கிராம சாந்தி, 29ம் தேதி கணபதி மற்றும் நவக்கிரக ஹோமம், மாலை, 4 மணிக்கு காவேரி தீர்த்தம் மற்றும் முலைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. 30ம் தேதி, காலை, 6 மணிக்கு வேத பாராயணம், தமிழ்மறை ஓதுதல், மாலை, 5 மணிக்கு மேல் கோபுரகலசம் வைத்தல், கோபுர கண் திறப்பு, யந்திரம் வைத்து அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் மற்றும் ஸ்வாமி பிரதிஷ்டை செய்யப்படும்.வரும், 31ம் தேதி அதிகாலை, நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து பூர்ணாஹüதி நடந்து, ராஜ கோபுரம், மகா கணபதி மற்றும் மாரியம்மன் ஸ்வாமி கோபுரம், வேத விற்பனர், வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.