விநாயகரே குலதெய்வம்!
இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று பிரமாண்டமாகக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப் பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகர் இம்மக்களுக்குல தெய்வமாகவும், வெற்றி தரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். பேண்ட், சூட், கோட்,டை அணிந்து விதவிதமாக கண்களுக்விருந்தளிப்பார். விநாயகருக்மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலயதரிசனம் திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள்.கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர். விநாயகருக்குத் தொடர்ந்து வழிபாடு செய்தபின், கடைசிநாளில் கணபதி பப்பா மோரியா என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருள்.