உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முகம் மட்டுமல்ல! முதுகும் காட்டலாம்!

முகம் மட்டுமல்ல! முதுகும் காட்டலாம்!

மற்ற தெய்வங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு விநாயகருக்உண்டு. அவருடைய பல வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி விசேஷமானது. இதற்எச்சில் பட்ட கணபதி என்று பொருள். துõய்மையே தெய்வம் என்று கருதும் நாம் நீராடி, துõய உடை உடுத்தி வழிபாடு செய்கிறோம். குளிக்காவிட்டால், வழிபாட்டுக்குத் தகுதியில்லை என கருதுகிறோம். தீட்டுக்காலத்தில் தற்காலிகமாக நம்மை நாமே புறக்கணிக்கிறோம். அருவருப்பான பொருட்களைக் கண்டால் முகம் சுளிக்கிறோம். இத்தகைய சுத்தம், அசுத்தம் ஆகிய இரண்டையும் மனிதன் கடக்க வேண்டும் என்பதற்காகவே உச்சிஷ்ட கணபதி வழிபாடு உருவாக்கப்பட்டது. இவர் ஒரு பெண்ணின் யோனியில் தும்பிக்கை வைத்த நிலையில் உள்ளார்.இதன்மூலம், எதையும் தாழ்வாகக் கருத தேவை யில்லை என்னும் பாடத்தை உணர்த்துகிறார். சாப்பிட்ட பின் குப்பையில் எச்சில் இலையை எறிகிறோம். அதை சுத்தமற்ற இடமாகக் கருதுகிறோம். ஆனால், அங்கும் எழுந்தருள்பவரே உச்சிஷ்ட கணபதி. அவருக்முதுகைக் காட்டி தோப்புக்கரணம் இடுவது மரபாக உள்ளது.  முதுகாட்டுவது என்பது ஒருவரை கேவலப்படுத்துவதை குறிக்கும். போரில் புறமுதுகிட்டு ஓடுபவர்களை உலகம் மதிப்பதில்லை. ஆனால், கடவுளுக்முகம், முதுஎன்ற பாகுபாடு கிடையாது. வெற்றி, தோல்வியை சமமாகப் பாவிக்கும் நிலைக்மனம் உயர வேண்டும் என்பதற்காக உச்சிஷ்டகணபதிக்முதுகாட்டி வழிபடுகின்றனர்.திருநெல்வேலி-வண்ணார்பேட்டை பைபாஸ் ரோட்டில் (மதுரை ரோடு) உச்சிஷ்ட கணபதிக்ராஜகோபுரத்துடன் கூடிய பெரிய கோயில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !