உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்!

விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரம்!

பண்ருட்டி: பண்ருட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வண்ணமிகு விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயார் செய்யும் பணி தீவிரமாக   நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி,  பண்ருட்டி பகுதிகளில்  எல்.என்.புரம், வையாபுரிபட்டினம் பகுதிகளில் அரை அடி உயரம்   முதல் 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சுவாமி சிலைகள் தயார் செய்யும் பணியில் கடந்த 9 மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் 29ம்   தேதி  விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் ஆர்டர் வாங்கியபடி வழங்க வேண்டும் என்பதற்காக கடைசி கட்டமாக வர்ணம் தீட்டும்   பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசின் உத்தரவு காரணமாக ரசாயன பொருட்கள் இல்லாமல் காகித கூழ்களும், களிமண், மைதா மாவு கலந்து சி  லைகள் தயார் செய்யப்படுகிறது.   இவ்வகை சிலைகள் எளிதில் கரையும் தன்மையுடன், வாட்டர் பெயிண்ட் மூலம் தயாரிப்பதால் இந்த வகை விநா  யகர் சிலைகள் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்காது என விநாயகர் சிலை தயாரிப்பவர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு புதியதாக மூன்று தலை விநா  யகர், பஞ்சமுக விநாயகர் சிலைகள் தயார் செய்து விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்த வகை சிலைகள் ஒரு அடிக்கு சிலைகளின் தன்மைகேற்ப 500   ரூபாய் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது  ஆந்திரா, கர்நாடகா, கேரளா  மாநிலத்திற்கும், தமிழகத்தின் பிற  மாவட்டத்திற்கு   தயாரிக்கப்பட்ட சிலைகள் அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !