ரகூத்தமர் பிருந்தாவனத்தில் சோமவர அமாவாசை
ADDED :4261 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், ரகூத்தமர் பிருந்தாவனத்தில் சோமவர அமாவாசையை முன்னிட்டு நாக தேவதையை பக்தர்கள் வலம்வந்தனர். திங்கள் கிழமை அமாவாசை மிகவும் பிரசித்தி பெற்றது. திருக்கோவிலூர், ரகூத்தமர் பிருந்தாவன வளாகத்தில் அரசமரத்தின் கீழ் உள்ள நாகதேவதையை நேற்று பக்தர்கள் வழிபட்டனர். திருமணம், குழந்தைபேறு உள்ளிட்ட வேண்டுதல்களை முன்வைக்கும் பக்தர்கள், நாகலிங்கத்திற்கு கற்பூரம் ஏற்றி பூஜித்து வலம் வந்தனர். ரகூத்தமர் மூலபிருந்தாவனத்திற்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.