உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!

வடலூர்: அயன்குறிஞ்சிப்பாடியில் உள்ள  செல்லியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. குறிஞ்சிப்பாடி அடுத்த அயன்குறிஞ்சிப்  பாடியில் உள்ள செல்லியம்மன் கோவில் புதுபிக்கப்பட்டதையொட்டி நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையாட்டி கடந்த 29ம் தேதி காலை   அனுக்ஞை,  விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி, கலாகர்ஷனம், யாகசாலை   பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை நடந்தது. நேற்று காலை   4ம் கால பூஜையை தொடர்ந்து பிம்பசுத்தி, நாமகரணம், மஹாபூர்ணாஹீதி முடிந்து  கடம் புறப்பாடாகி காலை 8:40 மணிக்கு விஜயராகவன், குமரகுரு,   தஷ்ணாமூர்த்தி முன்னிலையில்  கோவில் விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செ#து வைத்தனர். பின்னர் மூலாலய கும்பாபிஷேகம்,   சுவாமி வீதியுலா நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !