தேவாலயத்தில் 60 மணிநேர தியானம்!
ADDED :4054 days ago
ஊட்டி : ஊட்டி புனித மேரீஸ் தேவாலயத்தில், 60 மணி நேர தொடர் தியானம் நடத்தப்பட்டது. ஊட்டி புனித மேரீஸ் தேவாலயத்தில், மறை மாவட்டத்தின், வெள்ளி விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, 60 மணி நேர தொடர் தியானம் நடத்தப்பட்டது. பிஷப் அமல்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. ஆராதனையை, வழிபாட்டு குழு அமைப்பாளர் லியோன் பிரபாகரன் முன்னின்று நடத்தினார். மறை மாவட்ட முதன்மை குறு அந்தோணி சாமி, ஆராதனையை நிறைவு செய்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை, புனித மேரீஸ் தேவாலய பங்கு குரு வின்சென்ட் மற்றும் இளைஞர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.