மதுரை ஆவணி மூல விழாவில் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை!
ADDED :4052 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆவணி மூலத் திருவிழா செப்., 9 வரை நடக்கிறது. தினமும் சுவாமியின் திருவிளையாடல் லீலைகள் நடக்கும். விழாவை முன்னிட்டு பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.
மீனாட்சி அம்மன் அலங்கரிக்கப்பட்ட கோலத்தில் முத்துக்கள் பதித்த ஜடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.