காஞ்சிபுரம் சுந்தரம்மன் கோவில் தீமிதி திருவிழா!
ADDED :4052 days ago
காஞ்சிபுரம் : சின்ன காஞ்சிபுரம், சுக்லபாளையம் சுந்தரம்மன், படவேட்டம்மன் கோவில் ஆடி திருவிழாவில், நேற்று தீமிதி திருவிழா நடந்தது. சின்ன காஞ்சிபுரம், சுக்லபாளையம் கோவிந்தன் தெருவில், சுந்தரம்மன், படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 32ம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த வியாழக்கிழமை துவங்கியது.வெள்ளிக்கிழமை அம்பாள் ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் ஊஞ்சல் திருவிழாவும், லட்சதீப வழிபாடும் நடந்தது. இதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளம் பகுதி குளத்தில் இருந்து, அம்பாள் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்கள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து, 8:00 மணியளவில் தீ மிதி திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பெண்களும், ஆண்களும், சிறுவர்களும் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தினர்.