வேளாங்கண்ணி ஆலயத்தில் தேவ அழைத்தல் விழா!
ADDED :4390 days ago
பெசன்ட் நகர்: அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 42ம் ஆண்டு திருவிழாவில் நேற்று, தேவ அழைத்தல் விழா நடந்தது. இதில், மேரி மாதாவின் தேர் பவனி நடந்தது. பெசன்ட்நகர், வேளாங்கண்ணி ஆலயத்தின், 42ம் ஆண்டு திருவிழாவின் நான்காம் நாளான நேற்று, தேவ அழைத்தல் விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை தமிழ், ஆங்கிலத்தில் திருப்பலிகள் நடந்தன. மாலை 5:30 மணிக்கு செபமாலை நடந்தது. அதை தொடர்ந்து நவநாள் ஜெபம் நடந்தது. பின், கூட்டுத் திருப்பலி நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் மேரி மாதா பவனி வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருளை பெற்றனர்.