ஏழிருக்க ஒன்பது ஒண்ணும் செய்யாது!
ADDED :4447 days ago
நாம் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப பலன் கொடுப்பவை நவக்கிரகங்கள். அந்த ஒன்பதும் வெங்கடேச பெருமாளின் உத்தரவை எதிர்பார்த்து சேவை செய்வதற்காக ஏழுமலையில் காத்திருப்பதாக சுப்ரபாதம் கூறுகிறது. “வாமனராக வந்த வெங்கடேசப் பெருமாளே! சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது பேரும் உமது தாமரை மலர் போன்ற திருவடிக்கு தொண்டு செய்ய காத்து இருக்கிறார்கள். எனவே, வெங்கடேசா! உமக்கு நல்ல காலைப் பொழுது புலரட்டும்!” என்று சுப்ரபாதத்தின் 18வது ஸ்லோகம் கூறுகிறது. இதன்படி, நவக்கிரகங்களுக்குரிய பணிகளைக் கட்டளையிடுபவர் ஏழுமலையான் என்பது தெளிவாகிறது. அவரைச் சரண்அடைந்தவர்களுக்கு நவக்கிரக தோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.