காளைக்கு என்ன காரணம்?
நல்லதை எல்லாம் நமக்கு கொடுத்து விட்டு, நமக்கு தேவையில்லாததை எல்லாம் வைத்துக் கொள்பவர் சிவபெருமான். சுடுகாட்டுக்குச் செல்ல நாம்பயப்படுகிறோம். ஆனால், சிவனுக்கு அதுவும் ஒரு இருப்பிடம். பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். ஆனால், சிவனுக்கோ அது ஆபரணம். கபாலத்தைப் (மண்டை ஓடு) பார்த்தால் நமக்கு பயம் வரும். ஆனால், அது தான் சிவனின் பிச்சைப் பாத்திரம். வெந்த சாம்பல் மனித வாழ்வின் முடிவு. ஆனால், அது தான் சிவனின் மேனியில் திருநீறாக திகழ்கிறது. தான் மட்டுமில்லாமல், இதே குணம் கொண்ட காளையைத் தன் வாகனமான ஏற்றுக் கெண்டவர் சிவபெருமான். நெல் கதிர் அறுத்த பிறகு, வயலில் இருக்கும் வைக்கோலும், அரைத்த பின் கிடைக்கும் தவிடும், அரிசி களைந்த கழுநீரும் என மனிதர்கள் ஒதுக்குபவற்றை, காளை விரும்பி உண்ணும், இப்படி எளியதை ஏற்கும் காளை மாட்டினை தன் வாகனமாக்கி, எளிமையே பக்திக்கு பெருமை என்று உணர்த்துகிறார் சிவன்.