உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சிலைகள் கடலூர் சில்வர் பீச்சில் விஜர்சனம்!

விநாயகர் சிலைகள் கடலூர் சில்வர் பீச்சில் விஜர்சனம்!

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய, கடலூருக்கு ஊர்வலமாக  கொண்டு செல்லப்பட்டன. விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 29ம் தேதி மங்கலம்பேட்டை, சுற்றியுள்ள கிராமங்களில் 43 இடங்களில் விநாயகர்  சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஐந்தாம் நாளான நேற்று கடலூர் சில்வர் பீச்சில் கரைப்பதற்கு,  காலை 9:45 மணியளவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பேரூராட்சி சேர்மன் பாஸ்கரன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை முத்துக்குமார்  எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை, இந்து முன்னணி நகர செயலர் கமலக்கண்ணன், நகர செயலர் மணிகண்டன், ஒன்றிய செயலர்  மணிகண்டன்  செய்திருந்தனர். டி.ஐ.ஜி., முருகன் தலைமையில், திருவண்ணாமலை எஸ்.பி., முத்தரசி, ஏ.டி. எஸ்.பி., வெங்கடாஜலபதி, 4 டி.எஸ். பி.,க் கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 16 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 400 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !