கொணலூர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!
ADDED :4053 days ago
செஞ்சி: செஞ்சி தாலுகா கொணலூர் திரவுபதியம்மன், மாரியம்மன், வரதராஜ பெருமாள், கங்கையம்மன், கூத்தாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (4ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி இன்று மாலை 5 மணிக்கு கரிக்கோல ஊர்வலம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, 108 மூலிகைகளால் லலிதா சகஸ்ரநாம யாகம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகளும், இரவு 9 மணிக்கு சுவாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதலும் நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு கோபூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, இரண்டாம் காலயாகசாலை பூஜைகள், 9.30 மணிக்கு கடம் புறப்பாடு, 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கொணலூர் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.