உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா!

திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி விழா!

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு திரௌபதிஅம்மன் கோவில் தீமிதி
திருவிழாவையொட்டி கடந்த, 10 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் மகாபாரத கதை நிகழ்ச்சியும் நடந்தது விழாவையொட்டி துரியோதனன், துச்சாதனன் படுகள நிகழ்ச்சியும், தொடர்ந்து திரௌபதி அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும் நடந்தது. அலங்கரிக்கபட்ட வாகனத்தில், திரௌபதி அம்மன் எழுந்தருளியதை தொடர்ந்து, கோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில், 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு போட்டு, அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !