சிந்தாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பேட்டையில் அருள்மிகு சிந்தாமணி அம்மன் கோயில் உள்ளது.இந்த கோயில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த 1ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. காலை 8 மணிக் கு 6ம் கால யாக சாலை பூஜைகள் முடிந்து பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடத்தப்பட்டன. காலை 9 ம ணிக்கு யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு காலை 9: 20 மணிக்கு வினாயகர், முருகன், காளியம்மன், பேச்சாயி அம்மன், காத்தவராயன் மற்றும் மூலவரான சிந்தாமணி அம்மன் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
கும்பாபிஷேகத்தை பூம்புகார் ரஜினி சிவாச்சாரி யார் நடத்தி வைத்தார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வ ந்து அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் பூம்புகார் எம்.எல்.ஏ., பவுன்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ம ணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம தலைவர், நாட்டாமை மற்றும் பஞ்சாயத்தார் செய்திருந்தனர். பொறையார் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.