திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பவித்ர உற்சவம்!
ADDED :4054 days ago
திருவல்லிக்கேணி : பார்த்தசாரதி கோவிலில் பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது. வரும், 10ம் தேதி வரை, ஏழு நாட்கள் உற்சவம் நடக்கும். முதல் நாளான நேற்று காலை ஹோமம் வளர்க்கப்பட்டது. நண்பகல், 12:00 மணிஅளவில் உற்சவர் பார்த்தசாரதி சுவாமிக்கு சதகலச அபிஷேகம் நடைபெற்றது.மாலை 4:00 மணியளவில் பவித்ரம் சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6:00 மணிக்கு கேடயத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.