உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா!

காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவ விழா!

காரைக்கால் : கைலாசநாதர் கோவி லில், ஆவணி மூல உற்சவ விழா நேற்று நடந்தது. சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்ட நிகழ்வை நினைவு கூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆவணி மூல உற்சவம் நடத்தப்படுகிறது.இந்த ஆவணி மூல உற்சவம், நேற்று நடந்தது. இதில், புட்டுக்கு மண் சுமந்து செல்லும் கோலத்தில் சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.முன்னதாக, கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன், தீபாராதனை நடந்தது.விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிவனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !