உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மர் – திரவுபதியம்மன் திருக்கல்யாணம்!

தர்மர் – திரவுபதியம்மன் திருக்கல்யாணம்!

சொரக்காய்பேட்டை: அக்னி வசந்த உற்சவத்தில், நேற்று முன்தினம், திருக்கல்யாணம் நடந்தது. இதில்,  தர்மர் – திரவுபதி  மணக்கோலத்தில் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சொரக்காய்பேட்டை, கொற்றலை ஆற்றங் கரையில் அமைந்துள்ள  திரவுபதியம்மன் கோவிலில், கடந்த வெள்ளிக்கிழமை அக்னி வசந்த உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 1ம் தேதி இரவு  பகாசூரனுக்காக, பீமன் வீடு வீடாக கும்பம் பெற்றுச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, தர்மர்,  திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தர்மர், திரவுபதியம்மன்  மணக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று காலை 10:00 மணியவில், அர்ச்சுனன் தபசு நடக்கிறது. நாளை  மறுதினம் காலை துரியோதனன் படுகளமும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !