முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4076 days ago
மதுராந்தகம் : பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில், நுாதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. மதுராந்தகம் அடுத்துள்ள பெரும்பாக்கம் கிராமத்தில், அருள்மிகு முத்துமாரியம்மன் கோவிலில் நுாதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இவ்விழாவையொட்டி, கடந்த, 2ம் தேதி மாலை, 4:30 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தி, ப்ரேவச பூஜை ஆகியவையும்; 3ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக சாந்தி, மஹாபூர்ணஹுதி, தீபாராதனை ஆகியவையும், அன்று மாலை, 6:00 மணிக்கு அஷ்டபந்தனம் சார்த்துதலும் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு மூல மந்திர ஹோமம், தத்வ ஹோமம், காலை, 9:00 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் ஆராதனைகள் வெகு விமர்சையாக நடந்தது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.