உஜ்ஜயினி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி அம்மன் கோயிலில், கும்பாபிஷேகம் நடந்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 2015ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால், இக்கோயில் உபகோயிலான பத்திரகாளி அம்மன், ஈஸ்வரி அம்மன், உஜ்ஜயினி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திட, 13 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்றது. இதில் உஜ்ஜயினி அம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து, நேற்று முன்தினம் முதல்கால யாகசால பூஜை நடந்தது. நேற்று காலை, 2ம் கால யாகசால பூஜை முடிந்ததும், கோயில் குருக்கள் விஜயகுமார் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின் நடந்த மகா தீபாரதனையில் கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் ராஜாங்கம், கக்காரின், பேஷ்கார்கள் ராதா, அண்ணாதுரை, கமலநாதன், கண்ணன், சிருங்கேரி மடம் மேலாளர் நாராயணன், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.