உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கெங்கைகொண்டான் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்!

கெங்கைகொண்டான் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்!

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் முத்தாலம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (8 ம் தேதி) நடக்கிறது. இதைமுன்னிட்டு, நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜை துவங்கியது. இரவு 9:00 மணிக்கு முதல் கால பூஜை, 96 விதமான மூலிகைகள் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று (8ம் தேதி) காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !