உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழா

ஐயனார் கோவில் கும்பாபிஷேக விழா

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த சீராப்பாளையம் ஐயனார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம் அடுத்த சீராப்பாளையம் எல்லையில் அமைந்துள்ள ஐயனார்-பூரணி பொற்கலை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக நேற்று அதிகாலை 4 மணிக்கு, திம்மச்சூர் சிவசண்முக சிவாச்சாரியார் தலைமையில் இரண்டாம் கால வேள்வி பூஜைகள், வேத பாராயணம், மகா பூர்ணாஹூதியாகம் நடந்தன. காலை8.45 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரம், நல்லாப்பாளையம் கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமிகளை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !