உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் ஆவணி பவுர்ணமி: பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலையில் ஆவணி பவுர்ணமி: பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று, ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். சிவ தலங்களில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாக திருவண்ணாமலையில், மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர். ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அதிகாலை நடை திறக்கப்பட்டு, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தர்ம தரிசனம், கட்டண தரிசனம் மூலமாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கோயிலில் வழிபட்டு, கிரிவலம் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !