தாய்வீடு சென்று தன் வீடு திரும்பிய குன்றம் முருகன்!
ADDED :4222 days ago
திருப்பரங்குன்றம் : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்க செப்.,3ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து மதுரைக்கு புறப்பாடாகினார். திருவிழா முடிந்து, செப்., 7ல் மதுரை சுவாமிகளிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நெல்பேட்டை மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளினர். அங்கு சர்வஅலங்காரமாகி பூப்பல்லக்கில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைந்தனர்.