சிதம்பரம் காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சிறப்பு ஹோமம்!
சிதம்பரம்: சிதம்பரம் காயத்ரி தேவி அம்மன் கோவிலில் ஆவணி மாத சராவண பவுர்ணமி உற்சவத்தையொட்டி சிறப்பு ஹோமம் இன்று நடக்கிறது. சிதம்பரம் வேத மாதா காயத்ரி தேவி அம்மன் கோவிலில் சராவண பவுர்ணமி உற்சவம் கடந்த 7ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதனையெ õட்டி கோவிலில் காயத்ரி தேவி அம்மனுக்கு தினமும் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் புறப்பாடு செய்து வீதியுலா நடக்கிறது. ஆவணி பவுர்ணமி தினமான இன்று காலை சராவண பவுர்ணமி நாளையொட்டி காயத்ரி தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் சன்னதியில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. இதில், ஏராளமான தீட்சிதர்கள் வேதபாராயணம், தேவி மகாத்மீய பாராயணம் மந்திரங்கள் கூறி சிறப்பு யாகம் செய்கின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சராவண பவுர்ணமி உற்சவ ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி மற்றும் நிர்வாகிகள், சபாநாயகர் கோவில் ராஜசேகர் தீட்சிதர் செய்கின்றனர்.