உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்மத ஈஸ்வர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

மன்மத ஈஸ்வர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!

காரைக்கால்: மதகடி சௌந்தரவல்லி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மன்மத ஈஸ்வர் மகா கும்பாபிஷேகம் நடந்தது. காரைக்கால் மதகடி என்.எஸ்.சி.,போஸ் வீதியில் உள்ள சௌந்தரவல்லி சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் மன்மத ஈஸ்வர் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 6ம் தேதி முதல்காலம் பூஜைகளுடன் அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை தொடங்கியது.நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜைகம் கோபுர கலச ஸ்தாபனம் மூலவருக்கு மருத்து சாத்துதல் நேற்று காலை 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மீனவர் கிராமத்து மக்கள் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டி பர்வதராஜ குல பஞ்சாயத்தார்கள்  சிறப்பாக செய்திருந்தனர். ஏராளமன பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !