உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மூலநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில், சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. அதையொட்டி, காலை மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு சனி பிரதோஷ வழிபாடு துவங்கியது. இதில் பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழுவினர், அர்ச்சகர்கள் ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !