ராமேஸ்வரம் பாம்பனில் மாதா சர்ச் விழா!
ADDED :4047 days ago
ராமேஸ்வரம் : பாம்பனில் உள்ள வேளாங்கன்னி மாதா சர்ச்சில், திருவிழாவை முன்னிட்டு ஆக., 29 ல் கொடி ஏற்றம் நடந்தது. தினமும் மாலையில் சர்ச்சில் நவநாள் திருப்பலி பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் சர்ச் வளாகத்தில் கத்தோலிக மதுரை வட்டார அதிபர் அந்தோணிராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்று, அன்று இரவு அலங்கரித்த தேரில் வேளாங்கன்னி மாதா எழுந்தருளி வீதி உலா வந்தார். இந்நிகழ்ச்சியில் பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பாதிரியார்கள் சேசுராஜா, சகாயராஜ், ஜேம்ஸ் அந்துவான்தாஸ், பாம்பன் பரவ குலசங்க தலைவர் சைமன், துணை தலைவர் பாசியான், மீனவர் சங்க தலைவர் ராயப்பன், செயலாளர் ஜெயபிரகாஷ், விழா குழுவினர் மோட்சம், அடைக்கலம் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்.