புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் சத்தியநாராயணா பூஜை!
ADDED :4044 days ago
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நடந்த சத்தியநாராயணா பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி ராக வேந்திரர் கோவிலில், மாதம் தோறும் பவுர்ணமியையொட்டி சத்தியநாராயணா பூஜை நடப்பது வழக்கம். அதன்படி, பவுர்ணமியையொட்டி நேற்று கோவில் வளாகத்தில் வேத விற்பனர்களை கொண்டு யாக பூஜை நடந்தது. ரகோத்தம ஆச்சார் தலைமையில், ரமேஷ் ஆச்சார், ராகவேந்திர ராவ் உள்ளிட்டவர்கள் பூஜை நடத்தினர். தொடர்ந்து, மிருத்திகா பிருந்தாவனத்திற்கு பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ராகவேந்திரா கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ராமநாதன், பேராசிரியர் உதயசூரியன், கதிர்வேல் ஆகியோர் செய்திருந்தனர்.