உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாஷ் மானசரோவர் யாத்திரை முடிந்தது!

கைலாஷ் மானசரோவர் யாத்திரை முடிந்தது!

டேராடூன்: இமயமலைத் தொடரில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாய மலைக்கு, ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்ற மானசரோவர் ஏரி இங்கு தான் உள்ளது. உலகிலேயே மிக உயரமான இடத்தில் உள்ள ஏரி என்ற பெருமையும் இதற்கு உண்டு. இந்தாண்டுக்கான யாத்திரை, கடந்த ஜூனில் துவங்கியது. நேற்றுடன், இந்த யாத்திரை முடிவுக்கு வந்தது. இதுகுறித்து, உத்தரகண்ட் மாநில சுற்றுலா துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்தாண்டு, ஒரே ஒரு குழு மட்டுமே யாத்திரை மேற்கொண்டது. யாத்திரைக்கான வழித்தடம், இயற்கை சீற்றங்களால் சேதமடைந்திருந்ததே இதற்கு காரணம். இந்தாண்டு, 28 மாநிலங்களை சேர்ந்த, 910 பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டனர். இவர்கள், 18 பிரிவுகளாக பிரித்து அனுப்பப்பட்டனர். கடைசி குழு, யாத்திரையை முடித்து விட்டு, இன்று (நேற்று) டேராடூன் வந்தடைந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !