உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை!
ADDED :4046 days ago
கீழக்கரை : கீழக்கரை அருகே கோகுலம் நகரில் உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது.மூலவரான பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். சாயல்குடி: காணிக்கூர் பாதாளகாளியம்மன் கோவிலுக்கு மாதந்திர பவுர்ணமி விளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பெண்கள் குத்து விளக்கேற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதேபோல், பிள்ளையார்குளத்தில் பனையூர் அம்மன் கோவிலுக்கு பெண்கள் விளக்கு பூஜை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.