திருக்கடவூர் மயானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடவூர் மயானம் கிராமத்தில் தேவார பாடல் பெற்ற ஸ்ரீ ஆம்ல குஜாம்பிகை உடனாகிய ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. பஞ்ச மயானங்களில் ஒ ன்றான இந்த தலத்தில் சுவாமி பிரம்ம தேவரை எரித்து நீராக்கி அவரை மீண்டும் உயிர்பித்து படைப்புத் தொழிலை அருளிய தலமாதலால் மயானம் என்று வழங்கப்படுகிறது. இதற்கு பிரம்மபுரி, வில்வாரண் யம் என்ற பெயரும் உள்ளது. இந்த கோயில் கடந்த 86 ஆண்டுகளாக சிதிலமடைந்திருந்தது. இந்நிலையில் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கி கோயில் திருப்பணிகளை செய்தது. திருப்பணி வேரலகள் முடி வடைந்ததை அடுத்து நேற்று பிரம்மபுரீஸ்வரர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 19ம் தேதி யாக சாலை பூஜைகள் தொடங்கி நேற்று 6 ம் கால பூ ஜைகள் முடிந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து காலை 10:40 மணி க்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு 11:40 வினாயகர், முருகன் மற்றும் சுவாமி, அம்பாள் சன்னதி விமானங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகம் செய்துவைக்கப் பட்டது. கும்பாபிஷேகத்தை திருக்கடையூர் கணேஷ் மற்றும் மகேஷ் குருக்கள் கள் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்தில் திருப்பனந்தால் ஆதின இளைய அதிபர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தருமபுரம் ஆதி ன கட்டளை விசாரனை குமாரசாமி தம்பிரான், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், இ ணை ஆணையர் ஜெகன்நாதன், மயிலாடுதுறை எம்.பி., பாரதிமோகன், பூம்புகார் எம்.எல்.ஏ. பவுன்ரா ஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.சீர்காழி டி.எஸ்.பி. வெங் கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர். முன்னதாக எம்.பி. பாரதிமோகன் மற்றும் அதிமுகவினர் கும்பாபிஷேகத்தை கான்பதற்கு கோயிலின் மேல் தலத்திற்கு சென்றனர். அப்போது அவர்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்த போலீசார் பக்தர்க ளை ஒரு பக்கமாக தள்ளினர். அதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.