உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி அம்மன் தேர் திருவிழா!

பிடாரி அம்மன் தேர் திருவிழா!

விழுப்புரம்: கெடார் அடுத்த பழைய கருவாட்சியில் பிடாரி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.  இதையொட்டி கடந்த 2ம் தேதி காப்பு  கட்டுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. பத்து நாள் நடந்த விழாவில், பல்வேறு அலங்கார வாகனங்களில் அம்மன் வீதியுலா காட்சி நடந்தது.  ÷ நற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தலும், இரவு 10 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து திருமண நிகழ்ச்சி, வாண  வேடிக்கையுடன் அம்மன் தேரில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !