உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அஸ்வதி பொங்கல் விழா

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் அஸ்வதி பொங்கல் விழா

நாகர்கோவில் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா 11-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. 11-ம் தேதி காலை 5 மணிக்கு கணபதிஹோமம், காலை, மதியம், மாலை நேரங்களில் சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சுமங்கலி பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர். 12-ம் தேதி காலை 10 மணிக்கு 3002 பொங்கல் வழிபாடு நடக்கிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு பஜனை நடக்கிறது. 13-ம் தேதி மாலை 5.30-க்கு திருவிளக்கு பூஜை, இரவு ஏழு மணிக்கு சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவசம் பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !