தஞ்சாவூர் ரகசியம்!
ADDED :5294 days ago
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகாய ரகசியம் போல, தஞ்சாவூர் பெரிய கோயிலிலும் ஆகாயம் ரகசியமாக இருக்கிறது. இக்கோயிலின் மூலஸ்தான விமானம், கோபுரம் போல மிக உயரமாக கட்டப் பட்டிருக்கிறது. சிவலிங்கத்திற்கு மேலே, விமானத்தின் உச்சிப்பகுதி வரையில் வெற்றிடமாகவே இருக்கிறது. சிவன், அரூப (உருவமற்ற) வடிவில் காட்சியளிப்பதை உணர்த்தும்விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். இந்த விமானம் தட்சிணமேர விமானம் என்று அழைக்கப்படுகிறது.