சி.கீரனூர் முருகன் கோவிலில் 14ம் தேதி கும்பாபிஷேக விழா!
கம்மாபுரம் அடுத்த சி.கீரனூர் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 14ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, நாளை (12ம் தேதி) மாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை நடக்கிறது. 13ம் தேதி காலை 8:00 மணிக்கு புனித நீர் எடுத்தல், மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மாலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை, கோமாதா பூஜை, தீபாராதனை, இரவு 11:00 மணிக்கு அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து 14ம் தேதி காலை 5:00 மணிக்கு இரண்டாம் காலய õகசாலை பூஜை, 7:00 மணிக்கு நாடி சந்தானம், 8:30 மணிக்கு கடம் புறப்பாடு, 9:00 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம், மூலவர் கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா குமார் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.