ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் தங்க விமான பணிகள் தீவிரம்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தங்க விமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் சன்னதி தங்க விமானம் அமைக்கும் பணி நாச்சியார் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் நடந்து வருகிறது. இதற்கு தேவையான தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக வெளி மாநிலங்களிலிருந்தும், <உள்ளூர் பக்தர்களும் வழங்கி வருகின்றனர். தற்போது வரை கிடைத்துள்ள தங்கத்தை தகடாக மாற்றி சிலைகளில் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இது குறித்து கோயில் தக்கார் ரவிச்சந்திரன் கூறியதாவது,“ ஆண்டாள் சன்னதி விமானம் 70 கிலோ தங்கத்தில் அமைக்கப்பட்டு இது வரை 40 கிலோ தங்கம் பக்தர்களிடம் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.அந்த தங்கத்தை கொண்டு பாதியளவு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் பக்தர்களின் முயற்சியுடன் முழுமையாக தங்க விமானம் அமைக்கப்படும்,” என்றார்.